மேலுார் : மேலுார் இ.மலம்பட்டி நெவுலிநாத அய்யனார் கோயிலில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி திருவிழா நடந்தது. பக்தர்கள் வழங்கிய 50க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி படையலிட்டனர். இதில் 132 கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.