பதிவு செய்த நாள்
17
ஆக
2019
03:08
ஈரோடு: ஈரோடு, பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ’கிருஷ்ண தரிசன கண்காட்சி மற்றும் விற்பனை’ நேற்று 16ம் தேதி முதல் துவங்கியது.
இதுபற்றி பூம்புகார் மேலாளர் சரவணன் கூறியதாவது: கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப் பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வரும், 24 வரை கண்காட்சி நடக்கிறது.
காகித கூழ் கிருஷ்ணர், களிமண் கிருஷ்ணர், பஞ்சலோகம், பித்தளை, மார்பிளில் செய்யப் பட்ட கிருஷ்ணர் சிலைகள், அலிகார் பித்தளை கிருஷ்ணர் சிலை, பஞ்சலோகம், தஞ்சை ஓவியம், நூக்க மரம், சந்தன மரம், கறுப்பு மற்றும் வெண்கலத்தால் ஆன சிலைகள், கிருஷ்ணர் டாலர்கள் விற்பனைக்கு உள்ளன. 50 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட விலையிலான கிருஷ்ணர் சிலைகள் உள்ளன. குறிப்பிட்ட பொருட்களுக்கு, 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.