விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2019 04:08
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த மூங்கில்பட்டில் ஆடி மாத உற்சவத்தை முன்னிட்டு தேர்திருவிழா நடந்தது.மூங்கில்பட்டு செங்கழுநீர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று 16ம் தேதி தேர்திருவிழாவை யொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள், முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.