பதிவு செய்த நாள்
17
ஆக
2019
04:08
சோளிங்கர்: முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலையை வருவாய்த்துறையினர் மீட்டனர்.
வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாண்டிய நல்லூரில், ஊருக்கு ஒதுக்குப்புறமான முட்புதரில் மூன்று அடி உயரமுள்ள முருகன் கற்சிலை நேற்று முன்தினம் 15ம் தேதி கிடந்தது. கிராமமக்கள் அந்த சிலையை எடுத்து, சுத்தப்படுத்தி வழிபாடு நடத்தினர்.
இது குறித்த தகவலின்படி, வருவாய்த்துறையினர் அந்த சிலையை மீட்க, நேற்று 16ம் தேதி காலை, 11:00 மணிக்கு சென்றபோது, கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மர்ம நபர்கள் கோவிலில் இருந்து திருடி வந்த முருகன் சிலையை, போலீசாருக்கு பயந்து முட்புதரில் போட்டு விட்டு போய் விட்டதாகவும், இந்த சிலைக்கு வழிபாடு நடத்துவது குற்றம் எனவும், போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த சிலையை எடுத்துச்செல்ல கிராமமக்கள் சம்மதித்தனர். போலீசார் அந்த சிலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.