பதிவு செய்த நாள்
19
ஆக
2019
02:08
சோமனுார்:சோமனுார், ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
சோமனுார், சேடபாளையம் ரோட்டில் உள்ளது, பிரசித்தி பெற்ற, ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில். இங்கு, ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன.
வரலட்சுமி பண்டிகை மற்றும் பஜனையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆடி மாத, கடைசி வெள்ளியை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நடந்த திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ஊஞ்சல் உற்சவம் முடிந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.