பதிவு செய்த நாள்
19
ஆக
2019
03:08
வீரபாண்டி: நல்ல மழை பொழியவும், உலக நன்மை வேண்டியும் நடந்த ’கஞ்சி கலய’ ஊர்வல த்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆதிபாரசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, இளம்பிள்ளை அருகே, வேம்படிதாளத்தில், கஞ்சி கலய ஊர்வலம், நேற்று 18ம் தேதி நடந்தது. மன்றத்திலிருந்து தொடங்கிய ஊர்வலத்தில், திரளான பக்தர்கள், செவ்வாடை அணி ந்து, வேப்பிலை கொத்துகளை இடுப்பில் கட்டிக்கொண்டு, தலையில் தீச்சட்டி, முளைப் பாரி மற்றும் கஞ்சி கலயங்களை ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் மன்றத்தை அடைந்தனர். அங்கு, சிறப்பு பூஜை செய்து, கஞ்சி, அன்னதானம் வழங்கப்பட்டது.
சங்ககிரியில்...: சங்ககிரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. மலையடிவாரம், எல்லையம்மன் கோவிலில் இருந்து, திரளான பெண்கள், அக்னி சட்டி கையில் ஏந்தி, கஞ்சி கலயத்தை தலையில் சுமந்துகொண்டு, சந்தைப்பேட்டை, புதிய இடைப்பாடி சாலை வழியாக, ஊர்வலமாகச் சென்று, பவானி சாலை யிலுள்ள, மன்ற கோவிலை அடைந்தனர். பின், சுவாமிக்கு பால் அபிஷேகம், பூஜை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.