பரமக்குடி : பரமக்குடி நகராட்சி காந்திநகர் உய்யவந்தாள் அம்மன் கோயிலில் 2ம் ஆண்டு முளைக்கொட்டு விழா நடந்தது. முன்னதாக வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து எமனேஸ் வரம் வழியாக காந்திநகர் கோயிலை அடைந்தனர்.
தொடர்ந்து இரவு ஸ்ரீமகமாயி என்ற பக்தி நாடகம் நடந்தது. கோயிலில் இருந்து புறப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் சுமந்து வந்தனர். அப்போது உய்யவந்தாள் அம்மன் கோயில் அருகில் ஊரணியில் பாரிகள் கரைக்கப்பட்டன. ஏற்பாடுகளை காந்திநகர் தலைவர் திருப்பதி, செயலாளர் கோவிந்தன், பொருளாளர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் சுந்தராஜ், துணை செயலாளர் ஜெயப்பிரகாசம்உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.