பதிவு செய்த நாள்
22
ஆக
2019
02:08
திருப்பூர்:திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில்களில், சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் சமூக ஆர்வலர் ஒருவர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு, இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.கடிதத்தில், ’திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில், விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில்களில், அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக, காலணி பாதுகாப்பகம், கட்டண கழிப்பிடம், குடிநீர் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்,’ என்று தெரிவித்துள்ளார்.