கூடலுார் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் குழந்தைகள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2019 03:08
கூடலுார் : கூடலுார் மங்குழியில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தில், குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து பங்கேற்றனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கூடலுார் மங்குழி பகவதி அம்மன் கோவிலில், சேவாபாரதி அமைப்பின் நந்தனம் பாலகோகுலம் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. காலை, 10:30 மணிக்கு கோவிலில் இருந்து கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் சிறுவர், -சிறுமியர் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து பங்கேற்றனர். ஊர்வலம் மைசூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக கூடலுார் விநாயகர் கோவில் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது.இதற்கான ஏற்பாடுகளை மங்குழி சேவா சங்க மகளிர் அமைப்பினர் செய்திருந் தனர்.