கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று (24ம் தேதி) துவங்குகிறது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் திருவரசன் பிள்ளை தோட்டம் ருக்மணி சத்யபாமா சமேத கண்ணபிரான் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இன்று (24ம் தேதி) காலை 8:00 மணிக்கு விசேஷ யாக வேள்வி, திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு உறியடி, வீதியுலா நடக் கிறது. 25ம் தேதி காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு திருக்கல் யாணம் நடக்கிறது.
வரும் 26ம் தேதி காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு கருட சேவையில் கண்ணபிரான் வீதியுலாவும், 27ம் தேதி காலை 7:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணி க்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சுந்தர் பட்டர் செய்து வருகிறார்.