திருப்புவனம் கீழடியில் தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2019 02:08
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் கீழடி5ம் கட்ட அகழாய்வில் நேற்று 26ம் தேதி முருகே சன் நிலத்தில் சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி போன்ற செங்கல் கட்டுமானம் கண்டறியப் பட்டுள்ளது.
கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நடைபெறுகிறது. இதில் முருகேசன் நிலத்தில் அழகிய செங்கல் கட்டுமானங்கள் கிடைத்து வந்த நிலையில் நேற்று சிறிய தொட்டி போன்ற அமைப் புடன் கூடிய கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது.முழுக்க முழுக்க செங்கற்களால் ஆன இந்த கட்டுமானத்தின் பயன்பாடு குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. 3 அடி அகலமும், 5 அடி நீளமும் நான்கு அடி ஆழமும் கொண்ட முழுமையான கட்டுமானமாக இது கிடைத் துள்ளது.
தரை தளத்திலும் செங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள அனைத்தும் ஒரே அளவிலான செங்கற்கள் என தெரியவந்துள்ளது. தண்ணீர் வைக்க பயன்படுத்தி இருந்தால் தண்ணீர் வெளியேறும் அமைப்பு எதுவும் இல்லை. தொழிற் சாலைகள், பெரிய வீடுகள் போன்றவற்றில் தண்ணீரை இதில் சேமித்து இருக்க வாய்ப்புண்டு. இதன் அருகிலேயே சிதிலமடைந்த செங்கற்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. இந்த தொட்டி யின் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவித் துள்ளனர்.