பதிவு செய்த நாள்
27
ஆக
2019
02:08
திருவொற்றியூர்: தேசக்காரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், பங்கேற்ற பக்தர்கள், ’ஓம் சக்தி... பராசக்தி’ என, விண்ணதிர முழங்கினர்.திருவொற்றியூர், சுங்கச்சாவடி - சாத்துமா நகர், தேசக்காரியம்மன் கோவில், நுாற்றாண்டு பழமைவாய்ந்தது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு, நேற்று 26ம் தேதி காலை, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் 25ம் தேதி காலை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் மற்றும் மஹா தீபாரா தனைகள் நடந்தன.தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, விமான கலசங்களில், புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது, கூடியிருந்த பக்தர்கள், ’ஓம் சக்தி... பராசக்தி’ என, விண்ணதிர முழங்கினர்.பரிவார மூர்த்திகளுக்கும், புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் முடிவுற்று, மஹா தீபாரா தனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.