பதிவு செய்த நாள்
28
ஆக
2019
12:08
சாயல்குடி : சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா சர்ச்சில் திருத்தல விழா கொடியேற்றம் ஆக.,25 மாலை நடந்தது. சாயல்குடி பங்குத்தந்தைலியோ ரெக்ஸ் தலைமை வகித்தார். மாதா சர்ச் தலைவர்அந்தோணிராஜா முன்னிலை வகித்தார். செயலாளர் பரலோகராஜ், சர்ச் பொருளாளர் தொம்மை செபஸ்தியான், நிர்வாகஸ்தர்கள் மரியதாஸ்,பால்சாமி, ராபர்ட் கென்னடி,பிரான்சிஸ் சேவியர், பாக்கியராஜ், ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆக.,25 முதல்செப். 1 வரை தினமும் மாலை முதல் இரவு 9:00 மணி வரை சிறப்புத் திருப்பலி, ஆராதனைகள், மன்றாட்டு ஜெபம்,அசன விருந்து உள்ளிட்டவைகள்நடந்து வருகிறது. செப்.,2ல் வேளாங்கண்ணி மாதாவின் சொரூபம் அலங்கரிக்கப்பட்டு ,தேர்பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை சாயல்குடி பங்குத் தந்தை, இறைமக்கள் செய்து வருகின்றனர்.