பதிவு செய்த நாள்
30
ஆக
2019
01:08
ஆத்தூர்: ஷீரடி சாய்பாபா கோவிலில், கும்பாபிஷேக இரண்டாமாண்டு சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர், அக்ரஹாரம், வரசித்தி விநாயகர் கோவில் வளாகத்தில், சத்குரு ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. அதற்கு, 2018, ஆக., 29ல் கும்பாபிஷேகம் நடந்தது.
அங்கு, வியாழன்தோறும், ஆராதனை, பூஜை நடந்து வருகிறது. கும்பாபிஷேக இரண்டாமாண்டு விழாவையொட்டி, நேற்று 29ல், சாய்பாபாவுக்கு வேள்வி பூஜை, பால், பழம், பன்னீர், தேன் உள்பட, 16 வகை அபிஷேகம் நடந்தது. பின், 300க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர், பாபா சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர். பின், மலர் அலங்காரத்தில் பாபா காட்சியளித்தார். தீபாராதனைக்கு பின், அன்னதானம் வழங்கப்பட்டது.