பதிவு செய்த நாள்
31
ஆக
2019
12:08
திருப்பூர்:விநாயகர் சதுர்த்தி மற்றும் விசர்ஜனத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்து அமைப்பினருக்கு போலீசார் ஆலோசனை வழங்கினர்.வரும் திங்கட்கிழமை விநாயக சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அனைத்து கோவில்களிலும், விநாயக பெருமானுக்கு அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.
இந்து முன்னணி சார்பில், இந்தாண்டும் விநாயக சதுர்த்தி விழா கொண்டாட அனைத்து ஏற் பாடுகளும் முடியும் தருவாயில் உள்ளது.தமிழகம் முழுவதும், ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அடுத்தடுத்த நாட்களில், விசர்ஜன ஊர்வலம் நடத்தப் பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இச்சூழலில், விநாயகர் சதுர்த்தி மற்றும் விசர்ஜன ஊர்வலத்தில், பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து, இந்து முன்னணி மற்றும் பிற அமை ப்பினர்களுடன் மாநகர போலீசார் நேற்று 30ல், 15. வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை நடத்தினர்.
அதில் தெரிவிக்கப்பட்ட கருத்து வருமாறு:கடந்த ஆண்டு வைக்கப்பட்ட இடங்களிலேயே இந்தாண்டும் சிலைகள் அமைக்க வேண்டும். புதிய இடங்களில் சிலை வைக்க அனுமதி கிடையாது. எந்த இடையூறுமின்றி, எளிதில் தீப்பிடிக்காத வகையில் சிலை அமையுமிடம் இருக்க வேண்டும். தனியார் இடத்தில் உரிய அனுமதி பெற்று அமைக்க வேண்டும். சிலைக்கு, குறைந்தபட்சம், 10 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.உரிய நபர்கள் தவிர வேறு ஆட்கள் இருக்க கூடாது.
எக்காணத்தை முன்னிட்டும் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்த கூடாது. பிற மதத்தின ரை புண்படுத்தும் வகையில் பாடல், பேச்சு இருக்க கூடாது. எல்லா வகையிலும், போலீசாரு க்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.ஏற்கனவே, அனுமதி பெற்றவாறு, விசர்ஜன ஊர்வலம், குறிப்பிடப்பட்ட வழியில் மட்டுமே செல்ல வேண்டும்.
திடீரென்று வேறு பாதையில் செல்ல அனுமதி கிடையாது. சிகைளை நான்கு சக்கர வாகன ங்களில் மட்டுமே, ஊர்வலமாக எடுத்து செல்ல வேண்டும்.ஆயுதங்கள் எடுத்து செல்ல கண்டிப்பாக அனுமதி இல்லை. தொண்டர்கள் மது அருந்தி செல்லக்கூடாது. ஒலிபெருக்கி, பட்டாசு, வாண வேடிக்கைக்கு அனுமதியில்லை. விநாயக சதுர்த்தி பிரதிஷ்டை மற்றும் விசர்ஜன ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்திட, அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.