கம்பம்: கம்பத்தில் விநாயகர் சதுர்த்தி விழா, ஊர்வலங்களுக்கென இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிலை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி செப்., 2ல் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு அனைத்து ஊர்களி லும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைப்பது வழக்கம்.
இந்தாண்டும் கம்பம் சுற்றுப்பகுதி ஊர்களில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் ஒன்றிய பகுதிகளில் சுருளிப்பட்டி கருநாக்க முத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி மற்றும் காமயகவுண்டன் பட்டி ஆகிய கிராமங்களில் நூற்றுக்கணக்கில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கென வத்தலக்குண்டல் இலிருந்து லாரிகளில் அவை கொண்டு வரப்பட்டன.