திருவாடானை : திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் உள்ள ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா கொடியேற்றம் நேற்று 30 ல், மாலை நடந்தது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சி யாக செப்.,7 ல் தேர் பவனி நடைபெறும். விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள், நாட்டுபுற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், கிராமத் தலைவர்கள் செய்து வருகின்றனர்.