மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் அறிக்கை: தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் உற்சவம் ஏப்.,12 முதல் 21 வரை நடக்கிறது. இதையொட்டி, ஏப்.,11ல் கோயிலில் இருந்து புறப்பாடாகும் அம்மன், மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளி, இரவு தங்கி, ஏப்.,12 மாலை புறப்படுகிறார். தெப்பக்குளம் கோயிலில் சேர்ந்த பின், கொடியேற்றம் நடைபெற்று உற்சவம் துவங்கும். முக்கிய விழாவான ரதஉற்சவம் ஏப்.,21ல் நடக்கிறது, என தெரிவித்துள்ளார்.