Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மணக்குள விநாயகர் கோவிலில் சதுர்த்தி ... சென்னையில் 3,000 மேல் விநாயகர் சிலைகள் சேகரிப்பு சென்னையில் 3,000 மேல் விநாயகர் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை சுற்றுவட்டாரங்களில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
சென்னை சுற்றுவட்டாரங்களில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 செப்
2019
12:09

சென்னை:  சென்னை சுற்றுவட்டாரங்களில், விநாயகர் சதுர்த்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதற்காக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற வகையில், தேங்காய், எள், மக்கா சோளம், கரும்பு, இளநீர், நவதானியம், கற்றாழை போன்ற உணவுப்பொருட்களால், விதவித மாக தயாரிக்கப்பட்ட, விநாயகர் சிலைகளை காண முடிந்தது.எள்ளினால் அத்திவரதர் விநாயகர்

மதுரவாயல், மார்க்கெட் அருகே, அத்திவரதர் அனந்தசயனத்தில் அருள்பாலிப்பது  போல், 50 கிலோ எள்ளினால், 9 அடி உயரம் உடைய, விநாயகர் சிலை  அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விநாயகர், நேற்று 2ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு அனந்த சயனத்திலும், அடுத்த மூன்று நாட்கள் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்க  உள்ளார்.

மணலியில் கரும்பு விநாயகர்மணலி, சின்னசேக்காடு, காந்திநகர் -  திருவேங்கடம் தெருவில், சர்வ மங்கள விநாயகர் கோவில் அறக்கட்டளை  நிர்வாகம் சார்பில், ராட்சத கரும்பு விநாயகர் சிலை பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது. 750 கரும்புகள், அன்னாசி பழங்களை பயன்படுத்தி, 15 அடி  உயரத்திற்கு, விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 அடி உயரத்தில்,  வாழைப்பூ, பாகற்காய், கேரட், பீட்ரூட் உள்ளிட்டவற்றால், சிவலிங்கமும்  செய்யப்பட்டுள்ளது.

புதுநகரில் தேங்காய் விநாயகர் விவசாயம் செழிக்க, இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற, இது போன்ற வினோத விநாயகர் சிலை வழிபாடு, இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகிறது. கடந்தாண்டு, கரும்பு விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இவ்விரு, விநாயகர் சிலை களும், 8ம் தேதி பிரிக்கப்பட்டு, சுற்றுவட்டார மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மட்டை தேங்காய் பிரசாதமாக வழங்குவதால், திருமண வரன் கூடும், நல்ல படிப்பு, கடன்  பிரச்னை தீரும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தவிர, திருவொற்றியூர், 27, சாத்தாங்காடு, 20, மணலி, 25, மணலிபுதுநகர், 26, எண்ணுார், 15, என, 113 ராட்சத விநாயகர் சிலைகள், தெருக்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று 2ம் தேதி காலை முதலே வழிபாடுகள் நடக்கின்றன.வலம்புரி விநாயகர் சிலைமாதவரம் அடுத்த கொளத்துார், செம்பியம் பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பில், 30 அடி உயர வலம்புரி விநாயகர் சிலை, அமைக்கப்பட்டி ருந்தது. அந்த பகுதியை சேர்ந்தவர்களால், 7,001 வெள்ளை சங்குகளால்  உருவாக்கப்பட்டிருந்தது.

*கொளத்துார் பூம்புகார் நகர் அருகே, 3 லட்சம் ருத்திராட்சைகளால், 36 அடி விநாயகர் சிலை உருவாக்கப்பட்டிருந்தது.

*பெரம்பூர் அடுத்த பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையில், 2.5 டன் கற்றாழை, 500 கிலோ கரும்பு ஆகியவற்றின் மூலம், 32 அடி உயர, அத்தி வரதர் விநாயகர் சிலை அமைக்கப்பட்டி ருந்தது.

*கொளத்தூர், ராம் நகரில், கோதுமை, கேழ்வரகு, உளுந்து, மொச்சை, மூக்கடலை உள்ளிட்ட சிறுதானியங்கள் மூலம், 13 அடி உயர நவதானிய விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது. மாதவரம், பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகர், ’எப்’ பிளாக் பிரதான சாலையில், 2.5 டன் மக்காச் சோளம், 200 அன்னாசிப்பழம், வெள்ளை, கருப்பு கரும்புகளால் ஆன, 20 அடி உயர விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது.விநாயகர் சிலைகளுக்கு, காலையில், சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டன. பக்தர்கள், அந்த சிலைகளை, ஆர்வத்துடன் ரசித்து, வணங்கி சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar