ராமநாதபுரம் அனுமதியின்றி விநாயகர் சிலை: குழி தோண்டி கரைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2019 02:09
ராமநாதபுரம்: விநாயகர் சதுர்த்தி தின விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. கடந்தாண்டு அனுமதி அளித்த இடங்களை தவிர்த்து இந்தாண்டு புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதிக்கவில்லை.
ராமநாதபும் இ.சி.ஆர்., பகுதியில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை போலீசார் குழி தோண்டி நீர் நிரப்பி கரைத்தனர்.