அன்னுார் சவுடேஸ்வரி அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2019 02:09
அன்னுார்:எல்லப்பாளையத்தில், பழமையான ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் மற்றும் ஆதி மூல விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 30ம் தேதி காலை திருவிளக்கு வழி பாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
இரண்டாம் கால வேள்வி 31ம் தேதி காலையில் நடந்தது. மதியம் கோபுர கலசங்கள் நிறுவுதலும், மாலையில், மூன்றாம் கால வேள்வியும், சுயம்வர பார்வதி ஹோமமும், கலை நிகழ்ச்சியும் நடந்தது.செப். முதல் தேதி, காலை 5:30 மணிக்கு, வேள்வி சாலையிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரால், ஆதிமூல விநாயகர் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. காலை 9:55 மணிக்கு, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.