தெய்வீக சக்தி குடியிருக்கும் மனதை ’ஸுமநஸ்’ என்பர். இதற்கு ’நல்ல மனம்’ என பொருள். மலருக்கும் ’ஸுமநஸ்’ என பெயருண்டு. செடி, கொடிகளும் தங்களின் மனதைப் பிரதிபலிப்பது போல பூக்களை மலரச் செய்வதால் இப்பெயர் உண்டானது. மனம் என்னும் மலரால் விநாயகரை வழிபடுவோர் பெறும் நன்மைகளை பட்டியலிடுகிறார் அவ்வைப்பாட்டி. வாக்கு வன்மை, நல்ல மனம் உண்டாகும்.மகாலட்சுமியின் அருள் சேரும். உடல்நலத்திற்கு குறைவு வராது. தேவர்களும் செயலைத் தொடங்கும் முன் பிள்ளை மனம், வெள்ளை குணம் கொண்ட விநாயகரை வழிபடுகின்றனர்.