வேலூர் மாவட்டத்தில், விநாயகர் சிலைகளை கரைக்க 16 ஏரிகளில் மட்டும் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2019 04:09
வேலூர்: வேலூர் மாவட்டத்தில், 16 ஏரிகளில் மட்டும், விநாயகர் சிலைகள் கரைக்க, கலெக்டர் சண்முக சுந்தரம் அனுமதி அளித்துள்ளார்.
இது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் அனுமதிக்கப்படும் ஏரிகளில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் கரைக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகளை கரைக்க அனுமதி இல்லை. விநாயகர் சிலைகளை கரைக்கும் ஏரிகள் விபரம் வருமாறு: வேலூர்- சதுப்பேரி, ஊசூர் ஏரி, கருகம்புத்தூர் ஏரி; ராணிப்பேட்டை - தண்டலம் ஏரி, புளியங்தாங்கல் ஏரி; ஆற்காடு: ஆற்காடு ஏரி, வேப்பூர் ஏரி; சோளிங்கர் -பெரிய ஏரி; அரக்கோணம்- மங்கம்மா பேட்டை ஏரி, மாவேறு ஏரி; குடியாத்தம்- நெல்லூர்பேட்டை ஏரி; ஆம்பூர்- பாலாறு மற்றும் சான்றோர்குப்பம் ஏரி; வாணியம்பாடி- பள்ளிப்பட்டு கிராம ஏரி; திருப்பத்தூர்- பொன்னேரி, ஏலகிரி ஏரி ஆகியவற்றில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.