பதிவு செய்த நாள்
05
செப்
2019
03:09
ஓசூர்: சூளகிரி பகுதியில், விற்பனைக்கு வைத்திருந்த நீர்நிலைகளை மாசுப்படுத்தும் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்று வட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தியின் போது அதிகள வில் சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது. இவை, நேற்று 4ம் தேதி முதல் நீர்நிலை களில் கரைக்கப்படுகின்றன. சூளகிரி தாசில்தார் ரெஜினா மற்றும் போலீசார், நேற்று 4ல், சூளகிரி பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு வைத்திருந்த ஏழு விநாயகர் சிலைகள், நீர்நிலைகளை மாசுப்படுத்தும் வகையில், ரசாயனம் மூலம் செய்தது தெரியவந்தது.
நீரை ஊற்றி, சிலை கரைகிறதா என ஆய்வு செய்தபோது, சிலை கரையவில்லை. இதை யடுத்து, ஏழு சிலைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி ஒன்றிய அலுவலகம் கொண்டு சென்றனர். ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில், சதுர்த்தியில் வைத்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளில், பெரும்பாலானவை நீர்நிலைகளை மாசுப்படுத்தும் பிளாஸ்டோ ஆப் பாரிஸ் மூலப்பொருளால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தான். அவற்றை, மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கண்டு கொள்ளவில்லை. சூளகிரி பகுதியில், முதல் முறையாக ரசாயன சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.