பதிவு செய்த நாள்
05
செப்
2019
03:09
தர்மபுரி: கடகத்தூரில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. தர்மபுரி அடுத்த கடகத்தூரில் உள்ள மாரியம்மன் கோவில் மற்றும் முனியப்பன் திருவிழா கடந்த, 1ல் துவங்கியது.
முனியப்ப சுவாமிக்கு தினமும் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டன. 2ல், பட்டாளம்மன் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் (செப்., 3ல்), காலை, 8:00 மணிக்கு, மாரியம்மனுக்கு, முளைப்பாரி எடுத்தல், 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. மாலை, 4:00 மணிக்கு, கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், இரவு, 8:00 மணிக்கு சுவாமி ஊர்வலமும் நடந்தன. நேற்று (செப்., 4ல்) பகல், 2:00 மணிக்கு, மாரியம்மன் கோவிலில் இருந்து, பட்டாளம்மன் கோவில் வரை, பக்தர்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. 3:00 மணிக்கு மேல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.