பதிவு செய்த நாள்
05
செப்
2019
03:09
கெங்கவல்லி: கெங்கவல்லியிலுள்ள, பழமையான கைலாசநாதர் கோவில் சிதிலமடைந்ததால், அப்பகுதி மக்கள், சிவ பக்தர்கள் குழுவினர், நன்கொடை வசூலித்து, ஐந்து லட்சம் ரூபாயில் சீரமைத்தனர். நேற்று 4ம் தேதி, அதன் கும்பாபிஷேக விழா நடந்தது.
காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. 8:00 மணிக்கு மேல், கைலாசநாதர், முருகன், விநாயகர், நவக்கிரகம், பரிவார தெய்வங்களின் கோபுர கலசத்துக்கு புனித நீரூற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. மாலையில், திருக்கல்யாணம், இரவு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. கைலாசநாதர், காமாட்சி அம்மன், பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.