பதிவு செய்த நாள்
05
செப்
2019
03:09
வீரபாண்டி: கந்தசாமி கோவிலில், குழந்தையற்ற தம்பதியர், விரதத்தை தொடங்கினர்.
ஆவணி சஷ்டி விரதத்தையொட்டி, சேலம் அருகேவுள்ள, காளிப்பட்டி கந்த சாமி கோவிலில், நேற்று 4ம் தேதி காலை, மூலவர் கந்தசாமிக்கு, கோ பூஜை செய்து, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மூலவர் கந்தசாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். அதேபோல், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய உற்சவர் முருகனுக்கு, சிறப்பு பூஜை செய்து, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்திக்கு அடுத்து வரும் ஆவணி சஷ்டியில், குழந்தை வரம் வேண்டி, விரதத்தை தொடங்கினால், பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால், சுற்றுவட்டார பகுதிகளி லிருந்து, திரளான பக்தர்கள், கந்தசாமி கோவிலுக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்து, குழந்தையற்ற தம்பதியர், விரதத்தை தொடங்கினர்.
மாலையில், மயில் வாகனத்தில், வள்ளி, தெய்வானையுடன் கந்தசாமியை, சிறப்பு அலங் காரத்தில் எழுந்தருளச்செய்து, கோவிலில் உலா வந்தனர். அதேபோல், சேலம், உத்தம சோழபுரம், கரபுரநாதர் கோவிலில், தனி சன்னதியில் அருள்பாலி க்கும் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, சர்வ அலங்காரத்தில் எழுந்தருளச் செய்தனர்.