பூஜை மற்றும் பித்ரு காரியங்கள் செய்யும்போது ஓராடையுடன்... அதாவது அங்கவஸ்திரம், துண்டு போன்ற மேல் வஸ்திரம் இல்லாமல் செய்யக் கூடாது. ஆட்காட்டி விரலை பயன்படுத்தக் கூடாது. எவர்சில்வர் விளக்குகளைப் பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. புளி, எலுமிச்சம்பழம், விபூதி ஆகியவற்றைத் தவிர, வேறுவகை ரசாயனங்களால் விளக்குகளை விலக்கக் கூடாது. பகவானின் பெயர் மற்றும் படம் பதிந்த வஸ்திரங்களை இடுப்புக்கு கீழே கட்டிக்கொள்ளக் கூடாது.