அன்னைக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அதில் அருள் திருநாமம் காமாட்சி என்பது, காஞ்சிமாநகரில் அன்னை காமாட்சியாய் அருள்கிறாள். அந்த கோயில் அன்னை பிலாகாச காமாட்சி, ஸ்ரீ சக்ர காமாட்சி, தபஸ் காமாட்சி, பங்காரு காமாட்சி என்றும் காட்சிகொடுத்து அருளிவந்தாள். இதில் பங்காரு காமாட்சி என்பது பிரம்மனால் வழிபடப்பட்ட பொன்னால் செய்யப்பட்ட அம்மனின் திருவுருவம், 16-ம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் அந்நியர் படையெடுப்பு அச்சத்தின் காரணமாக, பங்காரு காமாட்சியை காஞ்சியிலிருந்து பாதுகாத்து தஞ்சையில் "பிரதாப சிம்மர் என்பவரிடம் ஒப்படைத்தனர்.
அவர் அன்னைக்குத் தஞ்சையில் ஒருகோயில் எடுத்து வழிபட்டார். அந்த நாள் முதல் பங்காரு காமாட்சி தஞ்சையில் அருள்புரிந்துவ ருகிறாள். திருநெல்வேலிக்கு அருகே 25 கி.மீ. தொலைவில் பராஞ்சேரி என்னும் ஊர் உள்ளது. அங்கு துர்கை பள்ளிகொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறாள். வனத்தில் வழி தவறி வந்த குழந்தைக்கு அருள் செய்த இந்த வனதுர்கை குழந்தையைக் கொல்ல வந்த திருடனை சம்காரம் செய்தாள். எப்போதும் அந்தக் குழந்தையை பாதுகாப்பதாகக் கூறி, சயனக் கோலத்தில் குழந்தையை அருகில் வைத்து பாதுகாத்துவருகிறாள் என்பது ஐதிகம்.