பதிவு செய்த நாள்
09
செப்
2019
03:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 30ல், தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடக்க உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா வரும், நவ.,28ல், நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு உற்சவம் நடத்தப்பட்டு, டிச.1ல், கொடியேற்ற த்துடன் தொடங்குகிறது.
டிச., 10ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கான, தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடங்க, வரும், 30ல், அதிகாலை, 5:30 மணிக்கு மேல், 7:05 மணிக்குள் கன்னியா லக்னத்தில், கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ராஜகோபுரம் அருகே பந்தக்கால் முகூர்த்தம் நடக்க உள்ளது. பின்னர், தீப திருவிழா பத்திரிகை அச்சடித்தல், விழா நடக்கும் நாட்களில் சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள், பஞ்ச மூர்த்தி வீதி உலா வரும் தேர் பழுது பார்த்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்தல் உள்ளிட்ட அனைத்து பூர்வாங்க பணிகளும் செய்யும் பணி தொடங்கும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் ஞானசேகர் செய்து வருகிறார்.