பதிவு செய்த நாள்
09
செப்
2019
03:09
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை, நரசிம்மன் சாலையிலுள்ள, புதுப்பட்டி மாரியம்மன், காளியம்மன், கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 6ல் கணபதி ஹோமத் துடன் தொடங்கியது. நேற்று (செப்., 8ல்) காலை, திருமுறை பாராயணம், நான்காம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, மேள, தாளம் முழங்க, சிவாச்சாரியார்கள் சந்திரசேகர குருக்கள், சரவண குமாரசிவம் குருக்கள், கோபுர கலசங்கள் மீது புனிதநீரூற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
பக்தர்கள், ’ஓம் சக்தி தாயே’ என, பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். பின், மூலவர் சுவாமிகளுக்கு, கற்பூர தீபாராதனை செய்து, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.