விருதுநகர்: விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி விழாவையொட்டி நடந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயில் திருவிழா கடந்த 2 ம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது.தினமும் சுவாமி அம்பாளுடன் வீதிஉலா வந்து மண்கப்படிகளில் எழுந்தருளினர். திருக்கல்யாணத்தையொட்டி காலை 7:00 மணிக்கு பல்லக்கில் சீர் வைக்கப்பட்டு ரதவீதிகளில் சுற்றி வரப்பட்டது. காலை 9:00 மணிக்கு சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும் மாலை மாற்றினர். தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் காப்பு கட்டப்பட்டது. இதன்பின் பூணுல் போடும் வைபவம், கும்ப பூஜைகள், யாக பூஜைகள் நடந்தது. தாரை வார்த்தலை தொடர்ந்து சொக்கநாதர்- மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு பூஜைகளும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி அம்பாள் அருள்பெற்றனர். இைத தொடர்ந்து இரவு யானை வாகனம், புஷ்ப வாகனத்தில் வீதி உலா வந்து மண்டகப்படியில் எழுந்தருளினர்.