அவலுார்பேட்டை:அவலுார்பேட்டைஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர கஞ்சிக்கலய விழா, அவதார திருவிழா மற்றும் மன்ற ஆண்டு விழா நடந்தது.
காலையில் கூட்டு வழிபாடும், சக்தி கொடியேற்றமும், சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. பின்னர் நடந்த பக்தர்களின் கஞ்சிகலய ஊர்வலத்தை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். ஆன்மிக வட்ட தலைவர் பார்த்தசாரதி, செயலர் கணேசன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் நெடுஞ்செழி யன், நடராஜன், கலா ராஜவேலாயுதம் முன்னிலை வகித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற் றனர். உலக நன்மைக்காக பக்தர்கள் கஞ்சி கலயம், அக்னி சட்டி, முளைப்பாரி, பால் குடங்களை ஏந்தி ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபராதனை நடந்தது. தொடர்ந்து, அன்ன தானம் வழங்கப்பட்டது