பதிவு செய்த நாள்
13
செப்
2019
03:09
சேலம்: சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகேவுள்ள, ஆந்திரா சுற்றுலாத்துறை அங்கீகாரம் பெற்ற, என்.எஸ்., அப்ஸரா டிராவல்ஸ் ஏஜன்ஸி வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா, வரும், 29 முதல், அக்., 8 வரை நடக்கவுள்ளது.
அதற்காக, சேலத்திலிருந்து, ஒருநாள் பேக்கேஜ் டூராக, ’வால்வோ மல்டி ஆக்ஸல்’ குளுகுளு சொகுசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரவு, 8:30, 10:30 மணிக்கு புறப்படும் பஸ்கள், காலை, 4:00 மணிக்கு, கீழ் திருப்பதியிலுள்ள தங்கும் விடுதிக்கு செல்லும். டிபன் ஏற்பாடு செய்யப்பட்டு, ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி., பஸ், திருமலைக்கு சென்று, அங்கு முடிகாணிக்கை செலுத்துபவர் களுக்கு, உடனடியாக ஏற்பாடு செய்து தரப்படும். பின், 300 ரூபாய், கட்டண வழியில், உடனடி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். பின், கீழ் திருப்பதிக்கு அழைத்து வந்து, மதிய உணவு வழங்கப்படும். ஏ.பி., சுற்றுலாத்துறை வால்வோ சொகுசு பஸ் மூலம், திருச்சானூர், அலர் மேல்மங்கை பத்மாவதி தாயார் தரிசனம், காளஹஸ்தி ஈஸ்வரன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படும்.
அங்கிருந்து, மாலை புறப்படும் பஸ், காலை, 3:00 மணிக்கு, சேலம் வந்து சேரும். இதற்கான டிக்கெட் முன்பதிவுக்கு, 0427 - 2902440, 94436 18566, 93611 67899 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், சேலம், புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழி, பெட்ரோல் பங்க் அருகே வுள்ள, சாரதி அர்ஜூன் ஜெராக்ஸ் காப்பியர்ஸ் கிளையை, 0427 - 2351995, 94879 47669 என்ற எண்களில் அழைக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.