பதிவு செய்த நாள்
13
செப்
2019
03:09
சேலம்: பெருமாள் கோவில்களில், திரளான பக்தர்கள், ’நோன்பு’ கயிறு கட்டி, அனந்த பத்மநாப விரதத்தை தொடங்கினர்.
ஆடி மாதத்தில், சுமங்கலி பெண்கள், வரலட்சுமி விரதமிருந்து, நோன்பு கயிறு கட்டிக் கொள் வர். அதேபோல், தொழில், காரியங்களில் வெற்றிபெற வேண்டி, பஞ்ச பாண்டவர் வழிபட்ட, ’அனந்த பத்மநாப’ விரதத்தை, ஆவணியில், ஆண்கள் மேற்கொள்வர். அதை யொட்டி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜருக்கு, திருமஞ்சனம் செய்யப்பட்டது.
உற்சவர் சவுந்தரராஜர், சயன கோலத்தில், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி அலங் காரத்தில் காட்சியளித்தார். திரளான ஆண்கள், குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நோன்பு கயிற்றை, ’சாமந்தி’ பூக்களுடன் சேர்த்து, வலதுகையில் கட்டிக்கொண்டு, ஆண்கள் விரதத்தை தொடங்கினர்.
மாலை, சர்வ அலங்காரத்தில் பெருமாளை, திருவீதி உலா வரச்செய்தனர். இதேபோல், பல் வேறு பெருமாள் கோவில்களில், திரளானோர் விரதத்தை தொடங்கினர். அவர்கள், அவர் களது வீடுகளில், அனந்தபத்மநாப சுவாமி படத்துக்கு முன், போளி(இனிப்பு) படைத்து விரதத்தை முடிப்பர்.