பதிவு செய்த நாள்
14
செப்
2019
03:09
ஆத்தூர்: ஆத்தூர், மந்தைவெளியில், மேலத்தெரு மாரியம்மன், கிழக்கு தெரு மகாமாரியம்மன், அம்பேத்கர் நகர் தாய் கருமாரியம்மன், மூப்பனார் ஆகிய கோவில்கள் உள்ளன. அதற்கு, மக்கள் சார்பில், 12 லட்சம் ரூபாயில், மரத்தேர் செய்ய திட்டமிட்டு, ஒன்பது அடி உயரத்தில், தேர் வடிவமைக்கும் பணி நடந்து முடிந்தது. நேற்று, தேர் வெள்ளோட்டம் நடந்தது. அதில், தேர் கமிட்டி நிர்வாகிகள், மக்கள், அம்பேத்கர் நகர், மந்தைவெளி, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக, தேரை வடம்பிடித்து இழுத்து, மீண்டும் கோவிலை அடைந்தனர். முன்னதாக, யாக பூஜை, சுவாமிக்கு அபி ஷேகம், தீபாராதனை நடந்தது.