பதிவு செய்த நாள்
17
செப்
2019
03:09
பொங்கலுார்:பொங்கலுார், கண்டியன் கோவில் மற்றும் காங்கயம், படியூர் ஆகிய இரண்டு கிராமங்களின் எல்லையில் அமைந்துள்ள காவல்தெய்வமான கரட்டு முனியப்பன், விநாயகர், கன்னிமார், கருப்பணசாமி கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு, இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. அதன் பின்,லநாடி சந்தானம், திரவியாகுதி, பூர்ணாகுதி, கடம் புறப்படுதல் நடந்தது. நேற்று (செப்., 16ல்) காலை, 6:30 மணிக்கு கோபுர விமான கும்பாபிஷேகம், விநாயகர், கன்னிமார், கருப்பராயன், முனியப்பசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கண்டியன் கோவில் ஆதீனம் சிவசுப்பிரமணிய குருக்கள், தங்கமணி குருக்கள் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர்.