பதிவு செய்த நாள்
19
செப்
2019
12:09
பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே, கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 2019ம் ஆண்டின் விகாரி வருட புரட்டாசி வைபவம், முதல் சனிக்கிழமையான வரும், 21ல் துவங்கு கிறது.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி-அவினாசி சாலை, கோவில்புதூரில், கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயம். கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், 600 ஆண்டுகால பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும், புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் வரும், 21 முதல் சனிக்கிழமையில், புரட்டாசி மாத சிறப்பு உற்சவம் துவங்கு கிறது. தொடர்ந்து ஐந்து வாரங்கள், சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை மற்றும் உற்சவங்கள் நடக்கின்றன.