பதிவு செய்த நாள்
19
செப்
2019
01:09
திருப்பூர்:புரட்டாசி மாத சனிக்கிழமை, பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலுக்கு செல்ல சிறப்பு பஸ் வசதி ஏற்பாடுகளை போக்குவரத்து துறையினர் செய்துள்ளனர்.
வரும், 21ம் தேதி, புரட்டாசி முதல் சனிக்கிழமை முதல் தொடர்ந்து ஐந்து வார சனிக்கிழமை களும், பல பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்கு கிறது.
கோவையில் இருந்து காரமடை ரங்கநாதர் கோவில், தென் திருப்பதி, பரமேஸ்வரன்பாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், வால்பாறை - பாலாஜி கோவிலுக்கு, 50 சிறப்பு பஸ் இயக்கப் படுகிறது.
திருப்பூர், காங்கயம், தாராபுரம், பல்லடத்தில் இருந்து ராமசாமி கோவிலுக்கு, 40 சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.இதேபோல், அவிநாசி, அன்னுாரில் இருந்து மொண்டிபாளையம் வெங்க டேச பெருமாள் கோவில் மற்றும் தாளக்கரை ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்களில், சாதாரண கட்டணமே வசூலிக் கப்படுவதாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்ததனர்.