பதிவு செய்த நாள்
19
செப்
2019
01:09
அவிநாசி : இதய நிறைவு நிறுவனம், ஸ்ரீராம்சந்த்ர மிஷன் இணைந்து, அவிநாசி, மேற்கு ரத வீதியில் உள்ள, குலாலர் திருமண மண்டபத்தில், தியானத் திருவிழாவை, வரும் 22, 23, 24 ஆகிய தினங்களில் நடத்துகின்றன.தினமும், மாலை 5:30 முதல் இரவு 7:30 மணி வரை நடைபெறும்.
அனுமதி இலவசம். முதல் நாளில், மூச்சுப்பயிற்சி, ஓய்வுநிலைப்பயிற்சி, தியானம், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில், புத்துணர்வுப்பயிற்சி - தியானம் கற்றுத்தரப்படும்.’தியானம் மூலம், மனதில் அமைதி உணர்வு ஏற்பட்டு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். திருப்பூர், பொங்கலூர், கொடுவாய் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முகாம் ஏற்கனவே நடந்துள்ளது. ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர்’ எனறு கூறுகின்றனர், தியானத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள்.