மலையப்ப சுவாமியாக நித்ய கல்யாண பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2019 05:09
காரைக்கால்: நித்யகல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை மலையப்பன் சுவாமியாக பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடக்கும். அதன்படி புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின் நித்திய கல்யாண பெருமாள் மலையப்பன் சுவாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் நித்தியகல்யாண பக்தஜனசபா வினர் சிறப்பாக செய்திருந்தனர். இதுபோல் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.