பதிவு செய்த நாள்
22
செப்
2019
03:09
திருப்பூர்:புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில், 15 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வழிபட்டனர்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், விஷ்ணு தலங்களில், தாசர்களும், பக்தர்களும் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். அதன்படி, விகாரி வருட புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, மாவட்டம் முழுவதும் உள்ள, பெருமாள் கோவில்கள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.கனகவல்லி தாயார், பூமிநீளா தாயார் மற்றும் வீரராகப்பெருமாள், நவரத்தின அங்கி அலங்காரத்தில் ஜொலித்தனர்; பக்தர்கள் பயபக்தியுடன் சேவித்தனர்.l கோவில்வழி பெரும்பண்ணை கரிவரதராஜபெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகமும், அலங்காரபூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.இதேபோல், தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேசபெருமாள் கோவில், அவிநாசி கரிவரதராஜபெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில், கருவலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள், மங்கலம் நால்ரோட்டில் உள்ள ஆதிகேசவபெருமாள் கோவில், வேட்டுவபாளையம் கார ணப்பெருமாள் கோவில்களில், புரட்டாசிமாத பூஜைகள் விமரிசையாக நடந்தன. உற்சவமூர்த்திகள், கருடவாகனத்தில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.தாசர்களுக்கு படிபூஜைபுரட்டாசி சனிக்கிழமை விரதம் இருக்கும் பெண்கள், வீட்டில் இருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள் எடுத்துவந்து, பெருமாள் தாசர்களுக்கு படைத்து வழிபட்டனர்.சங்கு, சேகண்டி நாதம் செய்து, கோவிந்தா... கோவிந்தா... கோஷம் எழுப்பி பூஜை செய்தனர். தொடர்ந்து, சேகண்டியில் வைத்து அரிசி பிரசாதமாக வழங்கினர்; பெண்கள், மடியேந்தி பெற்றுக்கொண்டனர்.