வடமதுராவில் யமுனை நதிக் கரையில் அமைந்துள்ளது. விஸ்ராம் காட் வராஹ அவதாரத்தின்போது இறைவன் ஒய்வெடுத்த இடம் இது. கம்சனைக் கொன்ற பின் கண்ணபிரான் ஓய்வெடுத்த இடம் என்றும் கூறுவர். கண்ணபிரான், கம்சனை வதம் செய்த இடம் கம்ஸட்டிலா எனப்படுகிறது. இதேபோல், காம்யக வனம் எனும் இடத்தில் உள்ள ஒரு பாறைக்கு, பிசாலினி சிலா என்று பெயர். இந்தப் பாறையில்தான் கிருஷ்ணர் தனது தோழர்களுடன் சறுக்கி விளையாடினாராம். இங்கு வரும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்தப் பாறையில் சறுக்கி விளையாடுகின்றனர். இந்தப் பாறையில் விளையாடிச் சென்றால், வாழ்க்கையில் சறுக்கி விடாமல் கிருஷ்ணர் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை! வ்யோமாசுரன் என்பவன், கண்ணனுடன் விளையாடும் குழந்தைகளைத் தூக்கி வந்து, ஓரிடத்தில் மறைத்து வைத்தான். இதையறிந்து பலராமர் அங்கு சென்று வ்யேõமாசுரனுடன் போரிட்டு, குழந்தைகளை மீட்டார், வ்ரஜ பூமியில் உள்ள அந்த இடம், வ்யோமாகரபூபா எனப்படுகிறது.