பதிவு செய்த நாள்
24
செப்
2019
02:09
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு பெறுவதை ஒட்டி வரைபடம் தயாரிப்பு பணி தீவிரம் அடைந்துள்ளன.கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.
முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், நீதியம்மாள், போதகுரு ஆகியோரது நிலங்களில் 52 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடந்து முடிந்துள்ளன. செப். 30ம் தேதியுடன் அகழாய் வு பணி நிறைவு பெறுகின்றன.அகழாய்வில் கிடைத்த பொருட்கள் குறித்த வரைபடங்கள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அகழாய்வில் இதுவரை 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இரட்டைச்சுவர், வட்டப்பானை, சுடுமண் குழாய், தண்ணீர் தொட்டி, சூது பவளம், பதக்கம், உணவு குவளை உள்ளிட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதில் பொருட்கள் கிடைத்த குழிகள், எவ்வளவு ஆழத்தில் பொருட்கள் கிடைத்தன, பொருட் களின் எடை, நீளம், அகலம், பொருட்களின் தன்மை உள்ளிட்டவை வரைபடங்களாக தயாரி க்கப்படுகின்றன. அகழாய்வில் கிடைத்துள்ள இரட்டைச்சுவர், தண்ணீர் தொட்டி இருக்கும் இடங்கள் குறித்து வரைபடங்கள் தயாரிக்கப்பட்ட பின் குழிகள் மூடப்பட வாய்ப்பு இருப்பதால் அவற்றின் இடங்கள் குறித்து வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு தொல்லியல்துறை ஆவணங் களில் இணைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.