பதிவு செய்த நாள்
24
செப்
2019
02:09
மாமல்லபுரம், :மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறையைப் பார்த்து, சீன நாட்டு உயர் அதிகாரிகள் குழுவினர் வியக்கின்றனர்.
பிரதமர், நரேந்திர மோடி, சீன அதிபர், ஜின்பிங், அடுத்த மாதம், காஞ்சிபுரம் மாவட்டம், மாமல் லபுரம் வருகின்றனர்; இங்குள்ள சிற்பங்களையும் பார்வையிடுகின்றனர். இதற்காக, மத்திய, மாநில அரசுகள், மாமல்லபுரத்தில் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. சீன நாட்டு, முக்கிய துறைகளின் உயரதிகாரிகள் குழுவினர், சிற்ப பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்கின்றனர். இங்கு, நீள பாறைக்குன்றின் சரிவான தளத்தில், அரைக்கோள வடிவில், வெண்ணெய் உருண்டை பாறை அமைந்துள்ளது. நிலநடுக் கம், புயல் என, இயற்கை பேரிடரிலும், இப்பாறை கீழே சரிந்து உருளாமல், அதே இடத்தில், பல நுாற்றாண்டுகளாக நிலைத்துள்ளது.
இதை பார்த்து வியக்கும் சீன அதிகாரிகள், பாறை நிற்பதற்கான காரணத்தை கேட்டு, ஆச்சரிய த்தை வெளிப்படுத்துகின்றனர். பாறையை, உருள விடாமல் தாங்குவது போல் நின்று, புகைப் படம் எடுக்கின்றனர்.