திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக் கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், புரட்டாசி இரண்டாம் சனிக் கிழமையை முன்னிட்டு, அதிகாலை 5:30 மணிக்கு மூலவர் உலகளந்த பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, 8:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் கண்ணாடி அறைக்கு எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் வேத விற்பன்னர்கள் வேதமந்திரம் முழங்க சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், திருக்கல்யாண வைபவம் சாற்றுமுறை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.