பதிவு செய்த நாள்
08
அக்
2019
04:10
உடுமலை: உடுமலை அருகேயுள்ள ஜல்லிபட்டியில், கற்களால் கட்டப்பட்ட கட்டடம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இக்கட்டடத்தின் வரலாறும் வித்தியாசமாக உள்ளது.
ஜல்லிபட்டி கிராமத்தில், மலைமேல் பிரசித்தி பெற்ற கரட்டுப்பெருமாள் கோவில் உள்ளது. ராமர் பாதம் உள்ள கோவில் என்ற சிறப்பும் உள்ளது.உயர்ந்த மலையில், செங்குத்தாக அமைந்த பாறைகள் சூழ்ந்த வழித்தடம், கரடு, முரடாக உள்ள பாதையில், அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது.அதே போல், கிராமத்திற்குள், நுாறு ஆண்டுக்கு மேல் பழமையான பஜனை மடம் உள்ளது. இங்கு, ராமர் படம் வைத்து, சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன.
மலைக்கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், முதியவர்கள், குழந்தைகள், பஜனை மடத்தி லுள்ள பெருமாளை வணங்கி வந்தனர்.ஓட்டுக் கட்டடத்தில் இருந்த, பஜனை மடத்தை, முழுவதும் கல் மடமாக மாற்ற, ஊர் பெரியவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக, அழகாக செதுக்கப்பட்ட கற்கள், அக்கால கான்கிரீட் தொழில்நுட்பமான, சுண்ணா ம்பு, கரும்புச்சாறு உள்ளிட்ட பொருட்களை கொண்டு கட்டப்பட்டது. தேக்கு மரங்களலான மேற்கூரை கான்கிரீட் என, 1933ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி திறக்கப்பட்டுள்ளது.கோபுரம் அமைக்காததால், பஜனை மடம் மாற்றப்படாமல், பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. வீணாக இருந்த கட்டடத்தை பயன்படுத்தும் வகையில், சுதந்திரத்திற்கு பின், காமராஜர் முதல்வராக இருந்த போது, நுாலகமாக மாற்றி, அவரே திறந்து வைத்தார்.பல ஆண்டுகளாக நு ாலகமாக செயல்பட்டு வந்த நிலையில், 10 ஆண்டுக்கு முன், புதிய கட்டடம் கட்டி, நுாலகம் இடமாற்றப்பட்டது.
அதன் பின், கட்டடம் வீணாகக்கூடாது என்பதால், இரண்டாக பிரிக்கப்பட்டு, ரேஷன் கடையும், மற்றொரு கடையும் செயல்படுகிறது.கட்டடம் கட்டி, 86 ஆண்டுகளாகியும், இன்றும் கம்பீர மாக காட்சியளிக்கிறது.