வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு வடக்காச்சி அம்மன் கோயிலில் மதுப் பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. இங்குள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழாவிற்கு முன்னதாக கொண்டாடப்படும் இவ்விழா வடக்காச்சி அம்மன் கோயிலில் நடந்தது.அதிகாலையில் பல்வகை அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் கோயில் முன் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.நள்ளிரவில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதுக்கலயம் சுமக்கும் வைபவம் நடந்தது. விரதமிருந்த சிறுமியை தலையில் மது கலயத்தை வைத்து கோயிலை சுற்றி வர கோயில் பலிபீடம் அருகே மது கலயத்தை வைத்தனர். சிறிது நேரத்தில் மது கலயம் பொங்கி வழிய பெண்கள் குலவையிட்டு வழிபட்டனர். இதன்பின் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதன் முடிவில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவிற்கான பறைசாற்றும் நிகழ்ச்சிநடந்தது.