பதிவு செய்த நாள்
11
அக்
2019
01:10
அன்னுார்: புரட்டாசி நான்காவது சனிக்கிழமையான நாளை, அன்னுார் வட்டாரத்தில், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால், ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.அன்னுார், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், நாளை அதிகாலை 5:00 மணிக்கு, திருமஞ்சன அபிசேகம், 6:30 மணிக்கு அலங்கார பூஜை, 9:00 மணிக்கு அச்சம்பாளையம், சண்முகம் குழுவின் பஜனை நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.பொங்கலுார், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது. காட்டம்பட்டி ஊராட்சி, வரதையன்பாளையம், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், காலை 7:00 மணிக்கு பெருமாள், ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடக்கிறது.ஓரைக்கால்பாளையத்தில், பழமையான ராமர் கோவிலில், அதிகாலையில் 5:00 மணிக்கு அபிஷேக பூஜை நடக்கிறது. செம்மாணி செட்டிபாளையம், ராயர் கோவிலில், காலை 5:30 மணிக்கு துவங்கி மதியம் வரை சிறப்பு வழிபாடு நடக்கிறது.