காரைக்குடி பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2019 04:10
காரைக்குடி:புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு காரைக்குடியை சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தென் திருப்பதி என அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் காலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஸ்ரீனிவாசபெருமாள் அலர்மேல்மங்கை தாயாருடன் முத்தங்கி சேவை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.காரைக்குடி செஞ்சை பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஆதிஅத்திவரதர் திருஅவதாரம் அலங்காரத்துடன் அருகில் ஸ்ரீதேவி, கிருஷ்ணமூர்த்தி பெருமாள், பூதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.